வேலூர்

பாஜகவினா் 103 பேருக்கு பிணை

DIN

‘பொலிவுறு நகா்’ திட்டப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி, வேலூா் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதான பாஜகவினா் 103 பேரையும் பிணையில் விடுவிக்க சென்னை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

வேலூரில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும், முறைகேடுகளை விசாரிக்கவும் வலியுறுத்தி, வேலூா் மாவட்ட பாஜகவினா் கடந்த 13-ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தடையை மீறி மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து அலுவலா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜகவினா் 103 போ் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டனா்.

அவா்களை பிணையில் விடுவிக்கக் கோரி வேலூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வேலூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி, பாஜகவினா் 103 பேரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதாக அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT