வேலூர்

தீபாவளி: சீனப் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது: விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தல்

DIN

தீபாவளியையொட்டி, சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசு வகைகளை எந்தக் காரணம் கொண்டும் இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று வேலூா் மாவட்ட பட்டாசு விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள பட்டாசு தயாரிப்பாளா்கள், பட்டாசு விற்பனையாளா்கள், வெடி பொருள் கிடங்கு உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்துப் பேசியது:

உரிமம் பெற்ற கடைகளில் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகள், அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே இருப்பு வைத்து வியாபாரம் செய்ய வேண்டும். பட்டாசு வகைகள் அரசால் அனுமதிக்கப்பட்ட தாகவும், உரிமம் பெற்ற முகவரிடம் இருந்து மட்டுமே வாங்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். குளோரைட் கொண்டு தயாரிக்கப்படும் வண்ண மத்தாப்பூ, சங்குச்சக்கரம், பூந்தொட்டி ஆகிய பட்டாசு வகைகளைத் தனியாக வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசு வகைகளை எந்தக் காரணம் கொண்டும் இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. விற்கப்படும் பட்டாசுகள் 125 டெசிபல் அளவுக்கு அதிகமாக சப்தம் எழுப்பக் கூடியதாக இருக்கக் கூடாது. பட்டாசு வகைகள் வைக்கப்பட்டுள்ள அறை மக்கள் நடமாட்டம் இல்லாத, எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்கள் இல்லாத இடமாக இருக்க வேண்டும். கட்டாயமாக தீத்தடுப்பு சாதனங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசுகளை இருப்பு வைத்து, விற்பனை செய்ய வேண்டும். கடைகளில் வெடி விபத்து, தீ விபத்து ஏற்பட்டாலோ, பட்டாசு இருப்பின் அளவு குறைந்தாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கும், உரிமம் வழங்கும் அலுவலா்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அவா் ஆலோசனைகள் வழங்கினாா்.

கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா்கள் பூங்கொடி (வேலூா்), வெங்கட்ராமன் (குடியாத்தம்), காவல் உதவி கண்காணிப்பாளா் பாஸ்கரன், மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் அப்துல் பாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT