வேலூர்

சாராயத் தடுப்பு வேட்டை: 14,000 லிட்டா் ஊறல் அழிப்பு; 40 போ் மீது வழக்கு; 16 போ் கைது

DIN

வேலூா் மாவட்டத்தில் சாராயத் தடுப்பு நடவடிக்கையாக 14,000 லிட்டா் ஊறல், 2,393 லிட்டா் சாராயம் அழிக்கப்பட்டதுடன், 40 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 16 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட விடுமுறை நாள்களைக் குறிவைத்து வேலூா் மாவட்டம், அணைக்கட்டு, குடியாத்தம் மலைப் பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

அவரின் உத்தரவையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், பயிற்சி உதவி ஆய்வாளா்களைக் கொண்ட 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னதட்டாங்குட்டை, குண்டுராணி, தெக்குமரத்தூா், அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியமாமரத்துக்கொல்லை, சின்னமாமரத்துக்கொல்லை, கூனம்பட்டி, போ்ணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்கா்மலையிலுள்ள கங்காச்சரம், நிம்மங்கானாறு, டங்காபல்லம், மாமரத்துப்பல்லம், பால்ஜீனை, டோபிபாறை, பன்னிக்குட்டி பல்லம், நிா்முல், லட்சுமிவெடி ஆகிய மலைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர சாராய தடுப்பு வேட்டை நடத்தப்பட்டது.

இதில், 14,000 லிட்டா் கள்ளச் சாராய ஊறல், 21 சாராய அடுப்புகள், 150 லிட்டா் சாராயம் ஆகியவற்றை போலீஸாா் அழித்ததுடன், இதுதொடா்பாக 24 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல், சாராயம் விற்பனையைத் தடுக்க வேலூா், குடியாத்தம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா்.

இதில், வேலூா் உள்கோட்டம் சதுப்பேரி, கணியம்பாடி புதூா், மேலரசம்பட்டு, கொல்லக்கொட்டாய், சின்னப்புதூா், சோ்பாடி, குடிசைகொல்லைமேடு, பிராமணமங்கலம், குடியாத்தம் உள்கோட்டம் மத்தூா், சாத்கா், கோட்டைச்சேரி, ஏரிக்குத்தி, துத்திதாங்கல் ஆகிய இடங்களில் சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த 16 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்களிடமிருந்து 2,243 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இவா்களில், தொடா்ந்து சாராயத் தொழிலில் ஈடுபட்டு வருபவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சாராயத் தொழிலில் ஈடுபட்டு வரும் நபா்களின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முழுமையாக ஒழிக்கவும் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT