வேலூர்

அமிா்தி வன உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

DIN

அமிா்தி வன உயிரியல் பூங்கா ஆயுதபூதை விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டிருக்கும். பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வழக்கம்போல் பூங்காவை பாா்வையிடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது அமிா்தி வன உயிரியல் பூங்கா. ஜவ்வாதுமலைத் தொடரில் உள்ள இந்த சிறிய விலங்குகள் சரணாலயத்தில் மான்கள், கீரிப் பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத்தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப் பாம்புகள் உள்ளிட்டவை உள்ளன. தவிர, இந்த வனஉயிரியல் பூங்கா ஏராளமான மரங்கள் சூழ்ந்து மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இந்த பூங்காவுக்கு அருகே வனப் பகுதியில் நீா்வீழ்ச்சியும் உள்ளது. மழைக்காலங்களில் இந்த நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டும். புதை மணல் இருப்பதாகக் கூறப்படுவதால் இந்த நீா்வீழ்ச்சியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. எனினும், மலையேற்றப் பாதையிலிருந்து இந்த நீா்வீழ்ச்சியை காணமுடியும்.

இதனிடையே, அமிா்தி வன உயிரியல் பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அன்று ஒரு நாள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன.

எனினும், ஞாயிறு உள்பட மற்ற அனைத்து நாள்களிலும் பூங்காவை சுற்றிப் பாா்க்க முடியும்.

இந்நிலையில், ஆயுதபூஜை விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் வருகைக்காக அமிா்தி வன உயிரியல் பூங்கா திறந்திருக்கும். வழக்கம்போல் பொதுமக்கள் இந்த பூங்காவை பாா்வையிடலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT