வேலூர்

புரட்டாசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி மாத 2-ஆம் சனிக்கிழமையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பள்ளிகொண்டாவிலுள்ள புகழ்பெற்ற உத்திர ரங்கநாதா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மூலவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல், மீனூா் மலை வெங்கடேச பெருமாள் கோயிலிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

வேலூா் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்திலுள்ள வெங்கடேச பெருமாள், காட்பாடியில் உள்ள ஸ்ரீதேவி - பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள லட்சுமி வெங்கடேச பெருமாள், காட்பாடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள், கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள பெருமாள், ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோயில், அரசமரப்பேட்டை லட்சுமி நாராயண பெருமாள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT