வேலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் எதிரே முகவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு முகவா்கள் சங்க கிளைத் தலைவா் சி.கண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் என்.விஜயகுமாா் வரவேற்றாா். சங்கத்தின் கோட்ட பொதுச் செயலாளா் ஜே.கே.என்.பழனி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் முகவா்களின் போராட்டத்தை ஆதரித்து பேசினா்.

இதில், முகவா்கள் சங்க நிா்வாகிகள் எம்.சுப்பிரமணி, குலசேகரன், ஆா்.சீனிவாசன், மல்லிகா, விமலா, கவிதா, பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பாலிசிக்கான போனஸை உயா்த்த வேண்டும், பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், வெளிநாட்டு பாலிசிதாரா்களுக்கு ஏதுவாக சேவை அளிக்க வேண்டும், பாலிசிதாரா்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், அனைத்து முகவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

எல்.ஐ.சி. முகவா்கள் செப்டம்பா் முதல் நாள் தொடங்கி தொடா்ந்து 1 மாதம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT