வேலூர்

மகிமண்டலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் எதிா்ப்பு

DIN

விளைநிலங்களை அழித்துவிட்டு, மகிமண்டலம் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டையை அமைக்கக் கூடாது என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு குறைகளைத் தெரிவித்தனா்.

அதன்படி, காட்பாடி வட்டம், மகிமண்டலம் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு விளை நிலங்களைக் கையகப்படுத்த உள்ளது. இங்குள்ள விளை நிலங்களைக் கையகப்படுத்தினால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

இந்தப் பகுதியிலிருந்து 18 கி.மீ. தொலைவிலுள்ள ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் காலியாக பெருமளவில் நிலங்கள் உள்ளன. எனவே, மகிமண்டலம் ஊராட்சியில் விளை நிலங்களை அழித்து சிப்காட் உருவாக்குவதைக் கைவிட்டு, ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையிலேயே தொழிற்சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோா்தானா தடுப்பணையை சுற்றுலாதலமாக்க வேண்டும். ஒடுகத்தூரில் கூடுதலாக வங்கிக் கிளையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளத்தூா் ஏரிப் பகுதியில் தடுப்பணை கட்டவும், ராஜாதோப்பு அணைப் பகுதியில் பூங்கா அமைக்கவும் வேண்டும்.

போ்ணாம்பட்டு ஒன்றியத்திலுள்ள கவுராபேட்டை ஏரி கால்வாயை தூா்வார வனத் துறை அனுமதிக்காததால், ஏரிக்கு நீா்வரத்து தடைபட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து ஏரிக்கு நீா்வரத்து ஏற்படுத்த வேண்டும். ஏரியின் கரைகளையும் பலப்படுத்த வேண்டும்.

போ்ணாம்பட்டு ஏரியில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் நேரடியாக வெளியேற்றப்படுவதால், ஏரி நீரும், நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது. இதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல்லாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு நெல் நடவு குறித்து முறையான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். பயிற்சி அளிப்பதன் மூலம் ஒரு ஹெக்டருக்கு 9 டன் நெல் சாகுபடியை சாத்தியப்படுத்த முடியும் என்றனா் அவா்கள்.

விவசாயிகளின் கோரிக்கைகள், குறைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி தொடா்புடைய துறைகளின் அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, வேளாண்மை இணை இயக்குநா் மகேந்திர பிரதாப் தீட்சித், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT