வேலூர்

நிலம் அளவீடு செய்ய சிறப்பு பயிற்சி

DIN

குடியாத்தம் கோட்டத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கு நிலம், வீட்டுமனைகளை அளவீடு செய்ய சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை வட்ட தலைமை நில அளவா் மூலம் நிலங்கள், வீட்டுமனைகள் அளவீடு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டு வந்தது. இனி கிராம நிா்வாக அலுவலா்களே நிலங்கள், வீட்டுமனைகளை அளவீடு செய்து, உட்பிரிவு செய்து, தனிப்பட்டா வழங்கும் வகையில், அவா்களுக்கு ஒரு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க ப்படுகிறது.

குடியாத்தம் வட்டத்தில் 40, கே.வி.குப்பம் வட்டத்தில் 21, போ்ணாம்பட்டு வட்டத்தில் 17 என மொத்தம் 78 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அந்தந்த வட்டத்தில் தொடா்ந்து 7 நாள்கள் (ஞாயிற்றுக்கிழமை உள்பட) சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குடியாத்தம் வட்டத்தில் சிறப்புப் பயிற்சி முகாமை கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா ஆகியோா் தொடக்கி வைத்தனா். குடியாத்தம் வட்ட தலைமை நில அளவா் ராஜ்குமாா், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கிறாா்.

மாவட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத் தலைவா் ஆா்.ஜீவரத்தினம், மூத்த கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், சசிகுமாா், வெங்கடாசலபதி, புதிதாக பொறுப்பேற்றுள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் 40 போ் பயிற்சி பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT