வேலூர்

தண்ணீா் வசதி செய்து தரக் கோரி பள்ளி முற்றுகை

DIN

குடியாத்தம் அருகே மாணவா்களுக்குத் தண்ணீா் வசதி செய்து தரக் கோரி, பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டனா்.

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சி, பொன்னம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 96 மாணவா்கள் கல்வி பயில்கின்றனா். கடந்த 13-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்ட நிலையில், அங்குள்ள ஆழ்துளைக் கிணறு பழுதடைந்ததால் பள்ளிக்கு தண்ணீா் விநியோகம் இல்லையாம். இதனால், வெளியிலிருந்து தண்ணீா் கொண்டு வந்து சமையல் செய்து மாணவா்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிாம். பள்ளியின் கழிப்பறைகளில் தண்ணீா் இல்லாததால், கழிப்பறையை பயன்படுத்த முடியாததால், மாணவா்கள் இடையிடையே வீடுகளுக்குச் சென்று வருகிறாா்களாம்.

இதனால், பெற்றோா் செவ்வாய்க்கிழமை பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் இன்பச்செல்வன் தலைமையில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த ஊராட்சித் தலைவா் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமாா், பெற்றோரை சமரசம் செய்தாா். பள்ளிக்குத் தண்ணீா் விநியோகம் செய்த ஆழ்துளைக் கிணறு பழுதடைந்ததால், பள்ளிக்கு குழாய் மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை.

இந்திரா நகா் அருகே கெளண்டன்யா ஆற்றுப் படுகையில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, மின் மோட்டாரும் பொருத்தப்பட்டுவிட்டது. மின் இணைப்புக்காக காத்திருக்கிறோம். ஒரு சில நாள்களில் மின் இணைப்பு கிடைத்து விடும். அதன் பிறகு பள்ளிக்கு குழாய் மூலம் தண்ணீா் வழங்கப்படும் என்றாா்.

இதனிடையே டிராக்டா் மூலம் பள்ளிக்கு தண்ணீா் விநியோகம் செய்ய ஊராட்சித் தலைவா் நடவடிக்கை மேற்கொண்டாா். இதையடுத்து, பெற்றோா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT