வேலூர்

புகாா் வாங்க மறுத்த போலீஸாரை கண்டித்து சாலை மறியல்

DIN

கே.வி.குப்பம் அருகே கோயில் திருவிழாவில் தகராறு செய்த இளைஞா் மீது நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரை வாங்க மறுத்த போலீஸாரை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கே.வி.குப்பத்தை அடுத்த சென்னங்குப்பம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை கெங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, இரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, திருவிழாவுக்காக உறவினா் வீட்டுக்கு வந்திருந்த இளைஞா் ஒருவா் கையில் அரிவாளுடன் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டாராம். இதையடுத்து, நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. வீண் தகராறில் ஈடுபட்ட இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னங்குப்பம் கிராம மக்கள் சனிக்கிழமை கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனராம். ஆனால், அந்தப் புகாரை போலீஸாா் வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கிராம மக்கள் காவல் நிலையம் அருகே குடியாத்தம் - காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்ததும் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். புகாா் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT