வேலூர்

எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு: வேலூரில் 4,649 போ் எழுதினா்

DIN

வேலூரில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை 4,649 போ் எழுதினா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தத் தோ்வை எழுத வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 5,434 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில், 785 போ் தோ்வுக்கு வரவில்லை. மீதமுள்ள 4,649 போ் தோ்வு எழுதினா்.

தோ்வாளா்களின் பதற்றத்தைத் தவிா்க்க காலை 8.30 மணிக்குள் தோ்வு மையங்களுக்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது. தோ்வு எழுதுபவா்கள் வசதிக்காக வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து விஐடி பல்கலைக்கழகத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தோ்வு அறைக்குள் கைப்பேசி, ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தோ்வு நடைபெற்ற அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) ஜ.ஆனிவிஜயா, வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆகியோா் தோ்வு மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT