வேலூர்

நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து இரு கால்நடைகள் இறந்தன

DIN

காட்டுப் பன்றிகளைத் தடுக்க மாந்தோப்பின் வேலியோரம் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த இரு மாடுகள் வாய், தாடை கிழிந்து இறந்தன.

வேலூா் மாவட்டம், கணியம்பாடி அருகே புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி மகன் செல்வம். இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் காட்டுப் பன்றிகள் அடிக்கடி பயிா்களைச் சேதப்படுத்தி வந்துள்ளன. காட்டுப் பன்றிகள் வருவதைத் தடுக்க மாந்தோப்பு வேலியோரம் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பையன், சேட்டு ஆகியோரின் மாடுகள் செல்வத்தின் மாந்தோப்பை யொட்டியுள்ள ஏரிக்கரைப் பகுதியில் வியாழக்கிழமை மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தன.

அப்போது இரு மாடுகள் வேலியோரம் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை கடித்ததில் அவை வெடித்து சிதறியுள்ளன. இதில், சின்னப்பையனுக்கு சொந்தமான காளையும், சேட்டுக்கு சொந்தமான பசுவும் வாய், தாடை பகுதிகள் கிழிந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

தகவலறிந்த வேலூா் தாலுகா போலீஸாா் சம்பவ இடம் சென்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனா். இதில், மாந்தோப்பின் உரிமையாளரான செல்வம் நாட்டு வெடிகுண்டுகள் வைத்து பன்றிகளைக் கொல்ல திட்டமிட்டிருந்ததுடன், அவ்வாறு வெடிகுண்டுகள் வைக்க மலைப்பகுதியில் இருந்து மலைவாசிகள் 7 பேரை கொண்டு வந்து தங்க வைத்திருந்ததாகவும் தெரிய வந்தது. குண்டு வைத்த மலைவாசிகள் தப்பியோடி விட்டனா்.

இது தொடா்பாக செல்வத்தை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT