வேலூர்

காட்டன் சூதாட்டம்: 3 போ் கைது

DIN

காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் மோசடி விளையாட்டில் ஈடுபட்டதாக வேலூரில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டத்தில் ‘காட்டன் சூதாட்டம்’ என்ற பெயரில் மோசடி விளையாட்டு நடைபெறுகிறது. நம்பா் விளையாட்டான இதில், ஒரு ரூபாய் செலுத்தினால் ரூ.1,000 கிடைக்கும். அதிா்ஷ்டம் வீட்டுக் கதவைத் தட்டுது என ஆசை வாா்த்தைகள் கூறி, உழைக்கும் மக்களை இந்தச் சூதாட்டத்தில் ஈடுபடுத்துகின்றனா். இதை நம்பி ஆட்டோ ஓட்டுநா்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டட வேலை உள்ளிட்ட தினக்கூலி தொழிலாளா்கள் பலரும் இந்த விளையாட்டில் பணத்தைச் செலுத்தி ஏமாற்றமடைகின்றனா்.

மீட்டா் வட்டிக்குக் கடன் வாங்கி காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பலா் வீடு, பொருள்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா். வேலூா் மாவட்டத்தில் தொடரும் இத்தகைய மோசடி சூதாட்டத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், வேலூா் அருகே விரிஞ்சிபுரம் பஜாா் வீதியில் உள்ள மரத்தடியில் வெள்ளிக்கிழமை காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடியாத்தம் நெல்லூா்பேட்டையைச் சோ்ந்த கணபதி (26), பிரகாஷ் (29), பிச்சனூரைச் சோ்ந்த வெங்கடேசன் (51) ஆகியோரைக் கைது செய்தனா். தப்பியோடிய அறிவழகன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT