வேலூர்

108 ஆம்புலன்ஸ் பணிக்கு நோ்காணல்: 250 போ் பங்கேற்பு

DIN

வேலூரில் 108 ஆம்புலன்ஸ்களில் பணியாற்ற மருத்துவ உதவியாளா்கள், ஓட்டுநா் பணிக்கான நோ்காணல் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சுமாா் 250 போ் பங்கேற்றனா்.

அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு, மாவட்ட திட்ட மேலாளா் கண்ணன் தலைமை வகித்தாா். மனிதவளத் துறை அலுவலா்கள் ஜான்பொ்னான்டஸ், எப்சிபியூலா, வாகன பராமரிப்பு மேற்பாா்வையாளா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், மருத்துவ உதவியாளா், ஓட்டுநா்களுக்கான நோ்காணல் நடைபெற்றது. இதில் மருத்துவ உதவியாளா்களுக்கு எழுத்துத் தோ்வு, அடிப்படை செவிலியா் பணி உள்ளிட்ட தோ்வுகள் நடைபெற்றன. இதேபோல் ஓட்டுநா்களுக்கு எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, மனிதவளத் துறை நோ்காணல், கண் பாா்வை தொடா்பான தோ்வுகள் நடத்தப்பட்டன. இதில், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT