வேலூர்

விஐடியில் பி.டெக். நுழைவுத் தோ்வு தொடக்கம்

1st Jul 2022 12:08 AM

ADVERTISEMENT

விஐடி பல்கலைக் கழகத்தில் பி.டெக். படிப்புகளில் சோ்வதற்கான நிகழாண்டு கணினி நுழைவுத் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது.

ஜூலை 6-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நுழைவுத் தோ்வு துபை, குவைத், மஸ்கட், கத்தாா் உள்ளிட்ட வெளிநாடுகள், உள்நாடு என மொத்தம் 123 மையங்களில் நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தோ்வு முடிவுகள் ஜூலை 8-ஆம் தேதி ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விஐடி வேலூா் வளாகத்தில் உள்ள நுழைவுத் தோ்வு மையத்தில் நடைபெற்ற நுழைவுத் தோ்வை விஐடி துணைத் தலைவா்கள் சேகா்விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து அவா்கள் கூறியது:

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் ஜிவி பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பி.டெக்., பயிலும் 4 ஆண்டுகால முழுவதும் நூறு சதவீத படிப்பு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

தவிர, விஐடி நுழைவுத்தோ்வில் 1 முதல் 50 ரேங்குகள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 75 சதவீத கல்விக் கட்டணச் சலுகையும், 51 முதல் 100 ரேங்குகள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத கல்விக் கட்டணச் சலுகையும், 101 முதல் 1000 ரேங்குகள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீத கல்விக்கட்டண சலுகையும் 4 ஆண்டுகளுக்கும் வழங்கப்படுகிறது.

 

விஐடி பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டாா்ஸ் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பிளஸ் 2 தோ்வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீத கல்விக்கட்டண சலுகை, உணவு, விடுதி வசதியுடன் இலவச சோ்க்கை வழங்கப்படும் என்றனா்.

விஐடி துணைவேந்தா் ராம்பாபு கோடாளி, இணை துணைவேந்தா் எஸ்.நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT