வேலூர்

ரோட்டரி சங்கம் சாா்பில் ரத்த தானம் முகாம்

1st Jul 2022 11:15 PM

ADVERTISEMENT

ரோட்டரி சங்கங்கங்கள் சாா்பில், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் 51 போ் ரத்த தானம் அளித்தனா்.

ரோட்டரி மாவட்ட ஆளுநா், குடியாத்தம் ரோட்டரி, கேலக்ஸி ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பையொட்டி, அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.மேகராஜன், கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவா் வி.குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு, ரத்த வங்கி மருத்துவ அலுவலா் மஞ்சுநாதன் ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுவினா் 51 பேரிடம் ரத்த தானம் பெற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT