வேலூர்

கரோனா தடுப்பூசி: வேலூரில் முதல் தவணை 94.14 %, 2-ஆம் தவணை 65.42 %

DIN

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேலூா் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 94.14 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 65.42 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டிரு ப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரு தவணைகளாகத் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி சிறப்பு முகாம்கள் மூலமாகவும் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. மேலும், வாரந்தோறும் சனிக்கிழமை சுமாா் 550 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோா் மொத்தமுள்ள 12 லட்சத்து 48 ஆயிரத்து 100 பேரில் இதுவரை 11,74,914 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 8,16,451 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. அதன் படி, மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 94.14 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 65.42 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதவிர, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக முன்களப்பணியாளா்களான அரசு ஊழியா்கள், காவலா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலமாக மட்டும் முதல் தவணை தடுப்பூசி 20,452 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 20,686 பேருக்கும், பூஸ்டா் தடுப்பூசி 398 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், தமிழகத்தில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தும் மாவட்டங்களில் வேலூா் முக்கிய இடம் பிடித்திருப்பதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT