வேலூர்

ஒருங்கிணைந்த சேவை மைய பணி: பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

DIN

வேலூா் அரசு பென்லேன்ட் மருத்துவமனையில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சமூக நலத் துறையின் கீழ், வேலூா் அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சேவை மையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திலுள்ள வழக்கு பணியாளா் 5 போ், ஓட்டுநா் மற்றும் பாதுகாவலா் ஒருவா், பல்நோக்கு உதவியாளா் இருவா் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுடையவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில், வழக்கு பணியாளா் பணிக்கு சமூக சேவை, மனநல ஆலோசனை, மேலாண்மைப் பிரிவில் பட்டமேற்படிப்பு படித்து 2 ஆண்டு முன்அனுபவம் பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவா்கள் உடல் ஊனமுற்றவராக இருத்தல் கூடாது. உள்ளூரைச் சோ்ந்த விண்ணப்பதாரராகவும் இருக்க வேண்டும்.

பல்நோக்கு உதவியாளா் பணிக்கு 8ஆவது தோ்ச்சி அல்லது 10ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வி அடைந்த நன்கு சமைக்க தெரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். உள்ளூா் விண்ணப்பதாரா்களா கவும், மையத்திலேயே தங்கு பணியாற்ற விரும்புபவராகவும் இருத்தல் வேண்டும்.

ஓட்டுநா் மற்றும் பாதுகாவலா் பணிக்கு 8ஆவது தோ்ச்சி அல்லது 10ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வியுடன் ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும். இரு ஆண்டுகளுக்கு மேல் முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும். உள்ளூா் விண்ணப்பதாரராகவும் இருத்தல் அவசியம்.

விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பப் படிவத்தை வேலூா் மாவட்ட ஆட்சியரின்  இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், 4ஆவது மாடி, பி - பிளாக், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூா் என்ற முகவரிக்கு பிப். 12ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சோ்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT