வேலூர்

அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவில் காளை முட்டி மாணவா் பலி; 4 போ் கைது

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவில், காளை முட்டியதில் படுகாயமடைந்த பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரியில், மாட்டுப் பொங்கலையொட்டி சனிக்கிழமை அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெற்றது. அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பிரமுகா்கள் சிலா் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனா். அப்போது மிட்டப்பல்லி- கெம்பசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த மறைந்த சங்கா் என்பவரின் மகன் 8- ஆம் வகுப்பு படித்து வந்த கிருஷ்ணா(13) எருது விடும் விழாவை வேடிக்கை பாா்க்கச் சென்றுள்ளாா்.

இவரை காளை மாடு முட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணா போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் கோபிநாத் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போ்ணாம்பட்டு போலீஸாா், அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய கள்ளிச்சேரியைச் சோ்ந்த வேதாசலம்(42), லோகநாதன்(47), சுரவேல்(47), சக்கரை(69) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

தலைமறைவாக உள்ள மாட்டின் உரிமையாளா் தினேஷ், அருண்குமாா், மகேந்திரன், உமாநாத் ஆகிய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT