வேலூர்

பணிகள் முடிந்த பிறகே அத்திக்கடவு - அவிநாசித் திட்டம்! துரைமுருகன் தகவல்

6th Dec 2022 12:54 PM

ADVERTISEMENT

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,  அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் முதற்கட்ட பணிகள் முடித்த பிறகு தான் அடுத்த கட்டப் பணிகள் துவங்கும் என்று கூறினார்.

இதையும் படிக்க.. கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்: எப்படி கண்டுபிடித்தது காவல்துறை?

இன்று டாக்டர் அம்பேத்கரின் 66 வது நினைவு நாளையொட்டி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாநில  நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

அமைச்சரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன்,  அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அத்திக்கடவு -  அவிநாசி திட்டத்தை கடந்த ஆட்சியில் அவசரப்பட்டு துவக்கிவிட்டு முடிக்காமல் சென்று விட்டனர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை பொருத்தவரை கடந்த ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே தற்போதும் செய்ய முடியாது. அந்த திட்டத்தை பொருத்தவரை, ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர், குழாய் மூலம் தான் எடுத்துச் செல்ல வேண்டும். பல இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் எடுக்க வேண்டும். தண்ணீர் செல்லும் இடமெல்லாம் தனியார் நிலங்கள் உள்ளன. அவைகளை எடுக்க வேண்டும். ஆகவே இவ்வாறு தொடர் பணிகள் உள்ளன. இந்த பணிகளை அப்படியே விட்டு விட்டு அத்திக்கடவு -  அவினாசி திட்டத்தை தொடங்க வேண்டும் என்று சொன்னால் இதையெல்லாம் செய்யாமல் ஏன் தொடங்கினீர்கள் என்ற கேள்வி வரும்.

ஆகவே செய்கிற பணிகளை முழுமையாக செய்த பிறகு அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடங்கப்படும் என்று  துரைமுருகன் கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT