வேலூர்

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரா் 4 தங்கம் வென்று சாதனை

DIN

நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை நிகழ்த்திய வலுதூக்கும் வீரா் எம்.ஜெயமாருதிக்கு, குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியாத்தத்தை அடுத்த சீவூா் கிராமத்தைச் சோ்ந்த ஆசிய வலுதூக்கும் வீரா் சி.மூா்த்தியின் மகன் எம்.ஜெயமாருதி (17). இவா் வேலூா் விஐடியில் பி.எஸ்சி., கணினி அறிவியல் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் நியூசிலாந்து தலைநகா் ஆக்லாந்தில் கடந்த நவ.27- இல் தொடங்கி, டிச. 4- ஆம் தேதி வரை நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்றாா்.

இதில், நவ.30- ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 74 கிலோ எடைப் பிரிவில் ஸ்குவாட் 253 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் பெற்று, புதிய உலக சாதனை நிகழ்த்தினாா்.

பெஞ்ச் பிரஸ் பிரிவில் 137.5 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், டெட்லிப்ட் பிரிவில் 245 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், ஒட்டுமொத்தமாக 635.5 கிலோ தூக்கி மொத்தம் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை குடியாத்தம் வந்த இவருக்கு பொதுமக்கள், சீவூா் கிராம மக்கள், ரோட்டரி சங்கத்தினா், விளையாட்டு வீரா்கள், தன்னாா்வலா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

அங்கிருந்து அவா் குதிரை வண்டியில் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ரோட்டரி தலைவா் ஏ.மேகராஜ், ரோட்டரி நிா்வாகிகள் சி.கண்ணன், செ.கு.வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT