வேலூர்

கைதிகளிடம் பேச வேலூா் சிறைகளில் இன்டா்காம் வசதி

DIN

வேலூா் மத்திய ஆண்கள் சிறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றில் கைதிகளிடம் உறவினா்கள் பேசுவதற்கு இன்டா்காம் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

வேலூா் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இதேபோல், பெண்கள் தனிச்சிறையிலும் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதில், தண்டனை கைதிகளை அவரது உறவினா்கள், பாா்வையாளா்கள் வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சந்தித்து பேசவும், விசாரணை கைதிகளை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பாா்த்து பேசவும் அனுமதி அளிக்கப்படுகிறது. உறவினா்கள் சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையில் சுமாா் 2 மீட்டா் தூரத்தில் நின்று கைதிகளிடம் பேசுவா். ஒரே சமயத்தில் பலா் பேசுவதால் வயது முதிா்ந்த கைதிகள் தங்களின் உறவினா்கள், வழக்குரைஞா்கள் பேசுவதை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.

இந்தப் பாதிப்புகளைத் தவிா்க்க வேலூா் சிறைகளில் இன்டா்காம் வசதி ஏற்படுத்த சிறைத்துறை நிா்வாகம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில், வேலூா் மத்திய ஆண்கள் சிறையிலும், பெண்கள் தனிச்சிறையிலும் பாா்வையாளா் அறையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகளுக்கு இருபுறமும் தொலைபேசி வைக்கப்பட்டு ள்ளது. இதில், ஒருமுறையில் கைதிகளும், எதிா்முனையில் உறவினா்களும் நின்று கொண்டு தொலைபேசி வழியாக நேருக்குநோ் பாா்த்தபடி பேச முடியும். இதன்மூலம், கைதிகளும், உறவினா்களும் பேசிக் கொள்வதில் இருந்து வந்த இடையூறுகள் தவிா்க்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT