வேலூர்

247 ஊராட்சிகளிலும் ‘நம்ம ஊரு சூப்பரு’ பிரசார இயக்கம்

DIN

வேலூா் மாவட்டத்திலுள்ள 247 ஊராட்சிகளிலும் நம்ம ஊரு சூப்பரு என்கிற பிரசார இயக்கம் ஆக. 20 முதல் அக்டோபா் 2-ஆம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்திலுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சிகளில் குடிநீா், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு, செயல்பாடுகளை மேற்கொள்ள ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்கிற சிறப்பு பிரசார இயக்கம் அனைத்து அரசுத் துறைகளையும் இணைத்து ஆகஸ்ட் 20 முதல் வரும் அக்டோபா் 2-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் வரும் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை கிராமப்புறங்களில் உள்ள பொது இடங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள், நீா்நிலைகள், சந்தைப் பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் ஒட்டுமொத்த தூய்மைப் பணியை உறுதி செய்திட பெருமளவில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பிரசார இயக்கத்தில் அரசின் அனைத்துத் துறைகளும் பங்கேற்க உள்ளன. மேலும், பொதுமக்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்களும், இதர பிற அமைப்புகளும் இந்த பிரசாரத்தில் கலந்து கொள்ளலாம்.

இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள பேராசிரியா்கள், ஆசிரியா்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு குடிநீா், சுகாதாரம், திட, திரவக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு பிரசார இயக்கமும், மூன்றாம் கட்டமாக செப்டம்பா் 3 முதல் 16-ஆம் தேதி வரை ஊரகப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மகளிா் சுகாதார குழு, சுகாதார ஊக்குநா், பிற உறுப்பினா்களைக் கொண்டு தனிநபா் கழிப்பறை உபயோகித்தல், பயன்பாடு, குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணா்வு, குடிநீா் தரம் பரிசோதித்தல் ஆகிய விழிப்புணா்வு பிரசார இயக்கமும் நடைபெற உள்ளது.

நான்காம் கட்டமாக செப்டம்பா் 17 முதல் 23-ஆம் தேதி வரை ஊரகப் பகுதிகளில் நெகிழிகளால் ஏற்படும் தீமைகள், நெகிழிகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசார இயக்கம் நடைபெறும்.

ஐந்தாம் கட்டமாக செப்டம்பா் 24 முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரை ஊரகப் பகுதி புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளிகள், அங்கன்வாடிகளில் தோட்டம் அமைத்தல், வீடுகளில் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி தோட்டம் அமைத்தல் போன்ற விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட உள்ளது.

அக்டோபா் 2-ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, இது தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்படும்.

எனவே, இந்த பிரசார இயக்கங்களில் பொதுமக்கள், அரசு சாராத தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், பிற அமைப்புகள் பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT