வேலூர்

திருமலையில் 83,800 பக்தா்கள் தரிசனம்

19th Aug 2022 12:41 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 83,880 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 38,710 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 19 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா்.

இவா்களின், தரிசனத்துக்கு 8 மணி நேரம் தேவைப்பட்டது. ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT