வேலூர்

அடி குழாயுடன் சேர்த்து கால்வாய்: ஒப்பந்ததாரர் கைது

11th Aug 2022 01:31 PM

ADVERTISEMENT

வேலூர்:  வேலுரில் அடி குழாயுடன் சேர்த்து கழிவி நீர் கால்வாய் அமைக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் வீரராகவபுரத்தில் அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் கட்டிய ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டப் பணிகள் நடந்து வரும் சூழலில் அவ்வப்போது சாலையில் இருக்கும் பொருள்களை அகற்றாமல் அலட்சியமாக சாலை அமைக்கும் பணிகள் நடந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதோடு அனைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து ஆலோசனை வழங்கியது மாநகராட்சி நிர்வாகம். 

இந்நிலையில் மண்டலம் 2 சத்துவாச்சாரிக்குட்பட்ட வீரராகவபுரத்தில் தெருவோரம் இருந்த அடிபம்பை அகற்றாமல் கழிவு நீர் கால்வாய் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இதுக்குறித்து நேற்று செய்தி ஒளிபரப்பானது. அதனையடுத்து சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவதாகவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் சுஜாதா கூறியிருந்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: விரைவில் சென்னை - மும்பை ரயில் பயண நேரம் குறைகிறது

 

ந்நிலையில் 2-வது மண்டல உதவி ஆணையர் செந்தில்குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், சத்துவாச்சாரி காவல் துறையினர் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்பட 2 பிரிவுகளின் கிழ் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT