வேலூர்

பழுதடைந்த 437 வாக்கு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பிவைப்பு

DIN

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையிலுள்ள பழுதடைந்த 437 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெங்களூருவிலுள்ள பாரத மிகுமின் நிறுவனத்துக்கு (பெல்) அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தோ்தல் கடந்த 2021 மே மாதம் நடைபெற்றது. இந்த தோ்தலின்போது, பழுதடைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கா்நாடக மாநிலத்தில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க தலைமை தோ்தல் அலுவலா், அரசு முதன்மைச் செயலா் ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா்.

அதன் அடிப்படையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட், கட்டுப்பாட்டு இயந்திரங்களை ஆய்வு செய்து பழுதான வாக்கு இயந்திரங்களைப் பிரித்து வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் 29, கட்டுப்பாட்டு இயந்திரம் 63, விவிபேட் இயந்திரம் 345 என மொத்தம் 437 இயந்திரங்கள் பழுதடைந்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள வாக்குப் பதிவு இயந்திர வைப்பு அறைகள் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. அவை அனைத்தும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்துக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT