வேலூர்

போதைப் பொருள் விற்போா் மீது கடும் நடவடிக்கை: வேலூா் ஆட்சியா் எச்சரிக்கை

DIN

வேலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், வேலூா் மாவட்ட அளவிலான குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வேலூா் மாவட்டத்தில் புகையிலை, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட நிா்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பொது இடங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் உள்ள பகுதிகள் என மாவட்டத்தின் எந்த இடத்திலும் தடை செய்யப்பட்ட புகையிலை, மதுப் பொருள்கள், போதைப் பொருள்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT