வேலூர்

ரூ.200 கோடியில் பருவமழை சேதங்கள் தற்காலிகமாக சீரமைப்பு: அமைச்சர் எ.வ.வேலு

DIN

வேலூர்: விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்ட (சிஆர்ஐடிபி) நிதியில் ரூ.200 கோடியை பயன்படுத்தி பருவமழையால் சேதமடைந்த சாலைகள், பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

பருவமழை காரணமாக பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியிலுள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இந்த தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைப்பது தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது } விரிஞ்சிபுரம் தரைப்பாலம் மொத்தம் 322 மீட்டர் கொண்டது. பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 80 மீட்டர் அளவுக்கு முழுமையாக சேதம டைந்துவிட்டது. இதனால், இப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் குறையாததால் பாலத்தை சீரமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் குறைந்ததும் தற்காலிகமாக பாலத்தை சீரமைத்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். அதன்படி, நிரந்தரமாக இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகம் முழுவ தும் 1,281 தரைப்பாலங்கள் உள்ளன. அவற்றில் 648 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், முன்னுரிமை அளித்து விரிஞ்சிபுரம் தரைப்பாலம் இந்தாண்டிலேயே உயர்மட்ட பாலமாக மேம்படுத்தும் பணி மேற்கொ ள்ளப்படும்.

பருவமழை காரணமாக மாநில அளவில் நெடுஞ்சாலைத்துறையில் பெருமளவில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. கன்னியாகுமரியில் மட்டும் 48 இடங்களில் சாலைகள் சேதமடை ந்துள்ளன. கடலூரில் அதிகப்படியான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒரு சில பாலங்கள் 75 சதவீத அளவுக்கு சேதமடைந்துள்ளன. சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்தவுடன்தான் சேத அளவை முழுமையாக தெரிவிக்க முடியும்.

பருவமழையால் சேதமடைந்துள்ள பாலங்கள், சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் மட்டும் மத்திய அரசிடம் ரூ.1,444 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்குவதற்கு முன் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக விரிவான சாலை உள்கட்டû மப்பு மேம்பாட்டுத் திட்ட (சிஆர்ஐடிபி) நிதியில் இருந்து ரூ.200 கோடியை பயன்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தற்காலிகமாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தரைப்பாலங்களை தடுப்பணையுடன் கூடிய உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்திக்கட்டலாம் என்பது நல்ல யோசனை. இந்த திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. விரிவான ஆய்வுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன் (வேலூர்), நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT