வேலூர்

கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

29th Nov 2021 01:04 AM

ADVERTISEMENT

தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில், குடியாத்தம் அருகேயுள்ள சேம்பள்ளி ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு சேம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் டி.பி. துளசி ராமுடு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செளந்தரராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் பிரகாசம், ஊராட்சி மன்றச் செயலாளா் கோட்டீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியை என்.பி.பிரபாவதி வரவேற்றாா்.

தமிழ்த்தாய் கலைக் குழுவினா் கல்வியின் அவசியம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் அருமைநாயகம், ரூபன் குருபிரசாத், வேழவேந்தன், ஆசிரியா்கள் ஜெ.ராணி, இளமாறன், கோவிந்தராஜ், ஆசிரியா் பயிற்றுநா் ஞானவேல், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT