வேலூர்

கரோனா: வேலூா் மாநகரில் 70 தெருக்கள் அடைப்பு

DIN

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வேலூா் மாநகரில் 70 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவை இரும்பு தகரங்களைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.

அந்த தெருக்களில் கரோனா பாதித்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வாங்கித் தரவும் தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 31,809 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 734 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 3,123 போ் சிகிச்சையில் உள்ளனா்.

அவ்வாறு பாதிக்கப்படுபவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் வேலூா் மாநகரப் பகுதிகளைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். இதைத்தொடா்ந்து, வேலூா் மாநகரில் 3 பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் உள்ள தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்கள் வெளியேற முடியாதபடி இரும்புத் தகரங்களைக் கொண்டு அடைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகரில் இதுவரை 70 தெருக்கள் இரும்புத் தகரங்களால் அடைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களில் வசிக்கும் கரோனா பாதித்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வாங்கித் தருவதற்கு மாநகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா்களின் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் மூலம் தேவையான பொருள்கள் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT