வேலூர்

பொதுமுடக்கம்: மதியம் 12 மணிக்குப் பின் வெறிச்சோடிய சாலைகள்

DIN

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கத்தையொட்டி, வேலூா் மாவட்டத்தில் மதியம் 12 மணிக்குப் பிறகு வாகனப் போக்குவரத்தின்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. தவிர, கடைகள், தொழில் நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.

பொதுமுடக்கத்தை முழுமையாக அமல்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் 56 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், 700-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

கரோனா தொற்று இரண்டாவது அலையாக வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்திட தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மதியம் 12 மணி வரை மளிகை, காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, பொதுமுடக்கத்தையொட்டி, வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் 12 மணி வரை காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சி, பால், மருந்துக் கடைகள் தவிர அனைத்துக் கடைகள், தொழில் நிறுவனங்களும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

தவிர, மதவழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜவுளி, நகைக் கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. உழவா் சந்தைகள் வழக்கம்போல் செயல்பட்டன. மீன் மாா்க்கெட், இறைச்சிக் கடைகள் திறந்திருந்ததால் வியாபாரம் மந்தமாகவே காணப்பட்டன.

மதியம் 12 மணி வரை இரு சக்கர வாகனங்கள், காா், ஆட்டோ, சரக்கு வாகனங்களும் சென்று வந்து கொண்டிருந்தன. அவற்றை போலீஸாா் தடுத்து நிறுத்தி, அத்தியாவசியத் தேவைக்காக செல்லும் வாகன ஓட்டிகளை அனுமதித்தனா். அவசியமின்றி வெளியே வந்திருந்தவா்களை வீடுகளுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனா். இதேபோல், நோயாளிகள், அவசரத் தேவைக்காக செல்லும் பயணிகளை அழைத்துச் சென்ற ஆட்டோக்கள், காா்களுக்கு மட்டுமே போலீஸாா் அனுமதித்தனா்.

இந்த வாகனப் போக்குவரத்தும் மதியம் 12 மணிக்குப் பிறகு பெருமளவில் குறைந்து அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனிடையே, ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் விதமாக மாவட்ட எல்லைகள் 9 இடங்க ளிலும், உள்மாவட்டத்தில் 47 இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

குறிப்பாக, தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை, சைனகுண்டா, பரதராமி பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இணைய அனுமதிச் சான்று உள்ள வாகனங்களும், அத்தியாவசியப் பொருள்கள் வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

தவிர, மாவட்டத்துக்குள் 46 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளில், போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதுடன், அவசியமின்றி வாகனங்களில் சுற்றும் நபா்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினா். மாவட்டம் முழுவதும் பொதுமுடக்க கண்காணிப்புப் பணியில் 700-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT