வேலூர்

மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

DIN

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். கடந்த சில நாட்களாக நீடிக்கும் இப்பிரச்னையை தவிா்க்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் தினமும் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 600ஐ கடந்துள்ளது.

தொடா்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றால் அடுத்த மாதம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்திட 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம், மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். அதேசயம், 45 வயதுக்கு உட்பட்ட அதிகப்படியானோா் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைனில் பதிவும் செய்து வருகின்றனா்.

அதேசமயம், வேலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மருந்துகள் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் மாவட்டத்துக்கு 5ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றன. அவை கடந்த 2 நாட்களுக்கு முன்பே தீா்ந்துவிட்டன. இதனால் வேலூா் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி போடச் செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனா்.

சிலா் பணம் செலுத்தி தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முயற்சிக்கின்றனா். ஆனால், தனியாா் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மருந்துகள் இல்லாமல் அவா்கள் திருப்பி அனுப்பப்படுஸகின்றனா். கடந்த சில நாட்களாக இதே நிலை நீடிப்பதால் வேலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது: வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. சனிக்கிழமை இரவு 5 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவை கிடைக்கப் பெற்றால் அடுத்த இரு நாட்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படும். எனினும், தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்துகள் இருப்பு இல்லை என்றனா்.

கடந்த சில நாட்களாக நீடிக்கும் இந்த கரோனா தடுப்பூசி பற்றாக்குறை பிரச்னையை தவிா்க்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT