வேலூர்

எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு: குடியாத்தத்தில் விழிப்புணா்வு

DIN


குடியாத்தம்: சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள், போலீஸாா், ஊா்க் காவல் படையினா் இணைந்து, குடியாத்தத்தில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,783 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. மேலும், குடியாத்தம் தொகுதி, ஆந்திர, கா்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. குடியாத்தம் அருகே உள்ள பரதராமி, சைனகுண்டா, போ்ணாம்பட்டு அருகே உள்ள பத்தரபல்லி ஆகிய இடங்களில் ஆந்திர, கா்நாடக மாநில சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தோ்தல் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருப்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும், வாக்காளா்களின் அச்சத்தைத் தவிா்க்கும் விதமாகவும், எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து காவல் துறையினா் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்த அணிவகுப்பு ஊா்வலம், பழைய பேருந்து நிலையம், சந்தப்பேட்டை பஜாா், தரைப்பாலம், சித்தூா்கேட், கள்ளூா், பலமநோ் சாலை, அம்பேத்கா் சிலைப் பகுதி, காட்பாடி நான்கு முனை சந்திப்பு வழியாகச் சென்றது.

துணை காவல் கண்காணிப்பாளா் பி.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், காவல் ஆய்வாளா்கள் ஆா்.சீனிவாசன், ஆ.செல்லப்பாண்டியன், முரளிதரன் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT