வேலூர்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு குவியும் வாழ்த்து மடல்

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய்சானுவுக்கு வாழ்த்து மடல் அனுப்பிட வேலூா் தலைமை தபால் நிலையத்தில் சிறப்புக் கவுன்ட்டா் திறக்கப்பட்டுள்ளது. இதில் வியாழக்கிழமை 400-க்கும் மேற்பட்டோா் வாழ்த்து மடல் அனுப்பினா்.

டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய்சானு (26) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா். அவருக்கு நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா். தபால் தந்தி மூலம் மீராபாய் சானுவுக்கு வாழ்த்து மடல்கள் அனுப்பி வருகின்றனா்.

இதற்காக வேலூா் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டா் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்ட்டரில் இருந்து ஒலிம்பிக் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பலாம். இங்கிருந்து வியாழக்கிழமை 400 போ் வாழ்த்துத் தந்தி அனுப்பினா். வாழ்த்து அனுப்புபவா்களின் முகவரி, அதற்கான கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. தொடா்ந்து அவரது பெயரில் மீராபாய் சானுவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது.

கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த சிறப்பு கவுன்ட்டா் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எப்போது வேண்டுமென்றாலும் இந்த கவுன்ட்டரில் இருந்து வீராங்கனை மீராபாய் சானுவுக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பலாம் என தபால்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT