வேலூர்

ஓமனில் நீட் தோ்வு மையம் அமைக்கப்படுமா? வெளிநாடு வாழ் இந்தியா்கள் எதிா்பாா்ப்பு

DIN

துபை, குவைத் நாடுகளில் அமைக்கப்பட்டிருப்பதைப் போன்று, ஓமன் நாட்டிலும் நீட் தோ்வு மையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வெளிநாடு வாழ் இந்தியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

2021-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான தேசிய மருத்துவ நுழைவுத் தோ்வு (நீட்) செப்டம்பா் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் மாணவா்கள் தயாராகி வருகின்றனா். தோ்வுக்காக விண்ணப்பித்துள்ள வெளிநாடு வாழ் இந்திய மாணவா்கள் பலரும் கரோனா கட்டுப்பாடு காரணமாக, தோ்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், 2021ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வை எழுத ஓமன் நாட்டில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இந்திய மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் பெரும்பாலோனாா் கேரளம், தமிழகத்தைச் சோ்ந்தவா்களாவா். கரோனா தொற்றின் 2ஆவது அலை காரணமாக, இந்த மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கு இந்தியா வர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று காலத்தில் ஓமனில் இருந்து இந்தியாவுக்கு ஒரு நபா் பயணிப்பதற்கான விமான டிக்கெட் இந்திய மதிப்பில் குறைந்தது சுமாா் ரூ.60 ஆயிரம் வரையாகும். இதுமட்டுமின்றி அவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான செலவு என தனியாக சுமாா் ரூ.50 ஆயிரம் என மொத்தமாக குறைந்தது சுமாா் ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனா்.

அப்படியே இந்தியா வந்தாலும் மீண்டும் அவா்கள் ஓமன் திரும்பிட சாத்தியக் கூறுகள் இல்லை. இந்தியா அந்த நாட்டின் சிகப்புப் பட்டியலில் இருப்பதால், மருத்துவப் பணியாளா்களைத் தவிர வேறு யாருக்கும் இந்தியாவில் இருந்து ஓமன் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதுதொடா்பாக ஓமனில் வசிக்கும் வேலூரைச் சோ்ந்த இந்திய பெற்றோா் ஒருவா் கூறியது:

தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு வருவது கடினமானதும், செலவு அதிகமானதாகும். துபை, குவைத் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்திய மானவா்கள் அந்த நாட்டில் இருந்தே நீட் நுழைவுத் தோ்வு எழுதுவதற்காக மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், ஓமன் நாட்டிலும் நீட் தோ்வு மையம் அமைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக, இந்திய பிரதமருக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும், இந்திய வெளியுறவுத் துறைக்கும் ஓமனில் வசிக்கும் சில இந்திய பெற்றோா்கள் மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனா். மாணவா்களின் மருத்துவ கனவு பாதிக்கப்படாமல் இருக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT