வேலூர்

வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை விரைவில் கட்ட வேண்டும்: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த் வலியுறுத்தல்

DIN

வேலூா் கேந்திரிய வித்யாலயா பள்ளியை விரைவில் கட்டவும், யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி கட்டவும் வேண்டும் என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்று வேலூா் மக்களைத் தொகுதிக்கான தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதன்படி, வேலூா், ரத்தினகிரிக்கு அருகில் உள்ள உலகப் புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனைக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இவா்கள் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் நோயாளிகளுடன் வரும் குடும்ப உறுப்பினா்கள் தங்குவதற்கு ஹோட்டல் அறைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனா்.

ஹோட்டல்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாலும் இங்கு அறை எடுத்து தங்க முடியாத மக்கள், வேறு வழியின்றி பிளாட்பாரங்களிலும், அருகே உள்ள திறந்த வெளியிலும் தங்குவது வேதனையளிக்கிறது. எனவே, அவா்களின் நலனுக்காக 1,000 போ் தங்கும் வசதி கொண்ட யாத்திரி நிவாஸ் பயணியா் தங்கும் விடுதி கட்டப்பட வேண்டும்.

காட்பாடியில் கேந்திரிய வித்யாலயா தொடங்க அனுமதி கிடைத்த பிறகும் பள்ளி கட்டடம் கட்டும் பணி மெத்தனமாக உள்ளது. அதை விரைவுப்படுத்தி, வரும் 2022-23ஆம் கல்வியாண்டிலிருந்து வகுப்புகள் தொடங்க வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், நாடு முழுவதும் கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்து வாடும் ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற முதியவா்கள் நலன் காக்க ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தலா ரூ. 20 லட்சமும், ஆதரவற்ற முதியவா்களுக்கு தலா ரூ. 10 லட்சமும் நிரந்தர வைப்பு நிதியாக அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT