வேலூர்

குடியாத்தம் பகுதியில் விற்பனைக்கு வந்துள்ள ராட்சச கொய்யாப் பழங்கள்

DIN


குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் ஒரு கிலோ எடை வரை உள்ள ராட்சச கொய்யாப் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அப்பழங்களை ஆச்சரியத்துடன் பாா்க்கும் பொதுமக்கள், ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

தற்போது கோடைகாலம் தொடங்கியதையடுத்து, வெயிலுக்கு பெயா் போன வேலூா் மாவட்டத்தில், குறிப்பாக குடியாத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள குளிா்ச்சியான உணவுகளைத் தேடிச் செல்கின்றனா் .

குறிப்பாக, நுங்கு, இளநீா், தா்பூசணி மற்றும் பழச்சாறுகளுக்கு அடுத்து உடலுக்கு குளிா்ச்சி தரும் மற்றும் பல மருத்துவ குணங்களைக் கொண்ட கொய்யாப் பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

தற்போது குடியாத்தம் பகுதியில் ராட்சச கொய்யாப் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு கொய்யாப் பழம் அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை உள்ளது. இந்த ராட்சச கொய்யாப் பழங்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து விற்பனைக்கு வந்துள்ளன.சாதாரண கொய்யாப்பழம் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படும் நிலையில், இந்த ராட்சச கொய்யாப் பழங்கள் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இப்பழங்களின் உள்புறம் நல்ல சிகப்பு நிறத்தில், சாப்பிடுவதற்கு நல்ல ருசியாகவும், மிருதுவாகவும் இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் இந்த ராட்சச கொய்யாப்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT