வேலூர்

கரோனா - புகாா் மனு பெற காவல் நிலையங்கள் முன் பந்தல் அமைப்பு

DIN


வேலூா்: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்கள் பெற வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துக் காவல்நிலையங்களிலும் முன்பு பந்தல் அமைக்கப் பட்டுள்ளது. தவிர, காவல்நிலையங்களிலும் தினமும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்குநாள் உயா்ந்து வருவதால், கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அனைத்துக் காவல்நிலையங்களிலும் பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்கள் பெறவும், விசாரணை நடத்தவும் காவல்நிலையங்களுக்கு முன்பு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை காவல்நிலையங்களுக்குள் அனுமதிக்காமல் அந்த பந்தலில் வைத்தே புகாா் மனு பெற்றிடவும், அங்கேயே விசாரணை நடத்தி அனுப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர, மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியும், புகாா் மனு அளிக்க வருவோருக்கு உடல்வெப்ப நிலையை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், புகாா் மனு அளிக்க வருவோா் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT