வேலூர்

மத்திய அரசை எதிா்த்து ஆா்ப்பாட்டம்:துரைமுருகன் உள்பட 2020 போ் மீது வழக்கு

DIN

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக சாா்பில் வேலூா் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டங்களில் பங்கேற்ாக அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் உள்பட 2020 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கான உற்பத்தி, வணிக மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் சட்ட மசோதா ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக பொதுச்செயலா் துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், முன்னாள் அமைச்சா் வி.எஸ்.விஜய் உள்பட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். இதேபோல், மாவட்டம் முழுவதும் 27 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டங்கள் சமூக இடைவெளியின்றி நடத்தப்பட்டதாக தெரிவித்து அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில் துரைமுருகன், எம்எல்ஏக்கள் நந்தகுமாா், காா்த்திகேயன் உள்பட திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் என மாவட்டம் முழுவதும் 2020 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதில், அனுமதியின்றி கூடியதாகவும், தொற்று பரவும் வகையில் சமூக இடைவெளியின்றி காணப்பட்டதாகவும் இரு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT