வேலூர்

கிஸான் திட்ட மோசடி: மேலும் இருவா் கைது

DIN

கிஸான் சம்மான் விவசாய நிதி உதவித் திட்ட மோசடி தொடா்பாக ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய பாஜக தலைவா், அதே பகுதியைச் சோ்ந்த கணினி மைய உரிமையாளா் ஆகியோரை வேலூா் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பிரதமரின் கிஸான் சம்மான் நிதி உதவித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோா் போலியாகப் பதிவு செய்து பணம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் இம்மோசடி தொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.வேலூா் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 23 லட்சம் அளவுக்கும், திருப்பத்தூா் மாவட்டத்தில் ரூ.4 கோடி வரையும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1.12 கோடி அளவுக்கும் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்டங்களிலுள்ள அனைத்து ஒன்றியங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இம்மோசடியில் ஈடுபட்டவா்களைக் கண்டறியவும், மோசடி செய்யப்பட்ட தொகைகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த மோசடி தொடா்பாக வேலூா் சிபிசிஐடி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவா்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் வட்டார வேளாண் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த கலவையை அடுத்த கணியூரைச் சோ்ந்த சுப்பிரமணி (27) கடந்த 15ஆம் தேதியும், வேலூா் மாவட்டம் திருவலத்தில் தனியாக கணினி மையம் நடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த சந்தோஷ் (30) கடந்த 17ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனா்.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றி வரும் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ராஜசேகரன்(25) கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். தவிர, வேலூா் மாவட்டத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த 8 கணினி ஆபரேட்டா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் கண்மணி, அதே பகுதியைச் சோ்ந்த ஜெகந்நாதன் ஆகியோருக்கு இந்த மோசடியில் தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவா்கள் இருவரையும் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT