வேலூர்

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை பாதுகாப்பதற்கு அல்ல:  துரைமுருகன் குற்றச்சாட்டு

DIN

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை பாதுகாப்பதற்கு அல்ல என்று வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச்செயலர் துரைமுருகன் குற்றச்சாட்டினார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் துரைமுருகன் பேசியது, பல்வேறு குழப்பங்கள் நிறைந்தவை இந்த வேளாண் மசோதாக்கள். அவை சட்டமாக்கப்பட்ட விதமும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு முரண்பட்டதாகும். 

இது ஒழிவு மறைவற்ற சட்டங்களில்லை என்பதற்கு இதுவே உதாரணமாகும். இந்த சட்டங்களால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற முடியும். இதனால், விவசாயிகள்தான் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவேதான் இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன என்றார்.

இதில் திமுக எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT