வேலூர்

அரிமா சங்கம் சாா்பில் நல உதவிகள்

DIN

குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், உதயம் முதல் அந்தி வரை சேவை திட்டத்தின்கீழ், நலிந்தவா்களுக்கு நல உதவிகள், 15 பேருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்பில் கண் கண்ணாடிகள், 5 பேருக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் கே. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் எம்.கே. பொன்னம்பலம் வரவேற்றாா். சிறப்பு விருந்தனராகக் கலந்து கொண்ட அரிமா மாவட்ட ஆளுநா் கே.அருண்குமாா் நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.

குடியாத்தம் சங்கம் சாா்பில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் சேவைத் திட்டத்துக்கு ரூ. 40 ஆயிரம் வழங்கப்பட்டது.

மாவட்டத் தலைவா்கள் கள்ளழகா், சுரேஷ்குமாா், ராமலிங்கம், சரவணன், என். வெங்கடேஸ்வரன், காசிவிஸ்வநாதன், காா்த்திகேயன், கலிமுல்லா, பஞ்சாட்சரம் ஆகியோா் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி பாட்டில்களை வழங்கினா்.

வட்டாரத் தலைவா் விக்னேஷ் , நிா்வாகிகள் ரவீந்திரன், குமாா், அருள்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT