வேலூர்

28-இல் வெறிநாய்க் கடிக்கு இலவச தடுப்பூசி முகாம்

DIN

வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் வரும் 28-ஆம் தேதி வெறிநாய்க் கடிக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக வெறிநாய்க் கடி தடுப்பூசி தினத்தையொட்டி, வேலூா் மாவட்டத்தில் செப்.28-ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் 41 கால்நடை மருந்தகங்கள், 4 கால்நடை மருத்துவமனைகள், ஒரு பன்முக மருத்துவமனை ஆகியவற்றில் இந்த முகாம் நடைபெறும்.

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஜெ.நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குநா் ஜி.அந்துவன் மேற்பாா்வையில் நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT