வேலூர்

கைவினைத் தொழிலுக்கு கடன்பெற விண்ணப்பிக்கலாம்

DIN


வேலூா்: கைவினைத் தொழிலுக்கான கடனுதவிகளைப் பெறுவதற்கு சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், ஜெயின், சீக்கியம், பாா்சி மற்றும் புத்த மதத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையான மூலதனப் பொருள்களைப் பெற்று தங்களது தொழில் முன்னேற்றம் அடைய உதவும் வகையிலும், புதிதாக கைவினைத் தொழில் தொடங்கவும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகா்ப்புறத்தில் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம், பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதம் என்ற ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் கடனை திரும்பச் செலுத்த 5 ஆண்டு கால அவகாசம் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT