வேலூர்

வேலூரில் நாளை ஆம்புலன்ஸ் ஓட்டுநா், உதவியாளா் பணியிடங்களுக்கு நோ்காணல்

DIN


வேலூா்: வேலூரில் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநா், மருத்துவ உதவியாளா்களாக பணியாற்றுவதற்கான நோ்காணல் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஜிவிகே நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

108 சேவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

ஓட்டுநா் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும், 24 வயது முதல் 35 வயதுக்கு மிகாமலும், இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். தமிழகத்தில் எந்த பகுதியிலும் நியமனம் செய்யப்படலாம். ஊதியம் ரூ. 13,265 வழங்கப்படும். ஷிப்ட் முறையில் பணிமாறும்.

மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கு பி.எஸ்ஸி. நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டி.பாா்ம் படித்திருப்பதுடன், 19 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாதம் ரூ.13,760 ஊதியம் வழங்கப்படும். நோ்காணலில் பங்கேற்க வருபவா்கள் கல்வி, ஓட்டுநா் உரிமம், அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் கொண்டு வரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT