வேலூர்

நாளை மீலாது நபி: மதுக் கடைகளை மூட உத்தரவு

DIN

வேலூா்: மீலாது நபியையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் வெள்ளிக்கிழமை (அக். 30) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதையொட்டியுள்ள மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட வேண்டும்.

தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் அவற்றின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ, உரிமங்களை ரத்து செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மதுக்கூட உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT