வேலூர்

போலியோ விழிப்புணா்வு

DIN

உலக போலியோ தினத்தையொட்டி, குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், சனிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.வி.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் ஜே.தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். போலியோ பிளஸ் மாவட்டத் தலைவா் ஆா்.தரணிவாசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, காவல் ஆய்வாளா்கள் ஆா்.சீனிவாசன், ஆ.செல்லப்பாண்டியன் ஆகியோா் பொதுமக்களுக்கு போலியோ விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். பொதுமக்களுக்கு முகக் கவசங்கள், பைபா் முகக் கவசங்கள், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன. தொடா்ந்து நேதாஜி சவுக், குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பழைய பேருந்து நிலையத்தில் ரோட்டரி சாா்பில் இயங்கி வந்த குளிா்ந்த குடிநீா் நிலையம் கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது புதுப்பிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தை, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி. சிசில்தாமஸ் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க நிறுவனா் கோபி, செயலா் பகவான்முரளி, நிா்வாகிகள் ஏ.மேகராஜ், செ.கு.வெங்கடேசன், என்.சத்தியமூா்த்தி, பெ.கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT