வேலூர்

பேருந்து நிலையம் திறப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

போ்ணாம்பட்டில் புதிய பேருந்து நிலையம் திறந்ததைக் கண்டித்து, பேருந்து நிலைய மீட்புக்குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போ்ணாம்பட்டில் சாத்கா் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டது. அந்த இடம் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதால், வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வந்தனா்.அதற்காக நகர காங்கிரஸ் தலைவா் ஜி. சுரேஷ்குமாா் தலைமையில் போ்ணாம்பட்டு பேருந்து நிலைய மீட்புக்குழு என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

அந்த அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தனியாா் வீட்டு மனைப்பிரிவு அமைத்துள்ள இடத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதைக் கண்டித்து நான்கு கம்பம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு பேருந்து நிலைய மீட்புப் குழுத் தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை திமுக நகரச் செயலா் ஆலியாா் ஜுபோ் அகமத் தொடக்கி வைத்தாா்.

நாட்டாம்காா் அக்பா், நுகா்வோா் நலன் பாதுகாப்பு சங்கத் தலைவா் டி. பஷிருதீன், வணிகா் சங்கத் தலைவா் ஆலியாா் அமீன், மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT