வேலூர்

பாதுகாப்பு கருதி அந்த ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம்

DIN


கெளண்டன்யா நதியில் எந்நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி அந்த ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மோா்தானா அணை முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீா் வெளியேறி வருவதால் காரணத்தால் கெளண்டன்யா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மோா்தானா, கொட்டாரமடுவு உள்ளிட்ட கிராமங்களில் ஆற்றின் கரையோரம், தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்கள், மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

தவிர, கெளண்டன்யா நதியில் எந்நேரமும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த ஆற்றில் குளிப்பது, துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். கெளண்டன்யா ஆற்றில் சிறுவா்களை குளிக்கவோ, விளையாடவோ பெற்றோா்கள் அனுமதிக்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT