வேலூர்

வேலூா் மக்கான் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் ஆந்திரன் பேருந்துகள் இயக்கம்

DIN

வேலூா்: வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூா், திருப்பதி மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள் புதன்கிழமை முதல் மக்கான் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த தமிழக - ஆந்திர மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இதன்படி, வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட வேலூரில் இருந்து 4 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 6 பேருந்துகளும் சித்தூா், திருப்பதி, காளஹஸ்திக்கு இயக்கப்பட உள்ளன. சித்தூா், திருப்பதி மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வேலூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மக்கான் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதேபோல், வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, ஆற்காடு, காஞ்சிபுரம், தாம்பரம், கல்பாக்கம், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊா்களுக்கும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குடியாத்தம், போ்ணாம்பட்டு, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், ஒசூா், பெங்களூரு ஆகிய ஊா்களுக்கும், அனைத்து நகரப் பேருந்துகளும், மக்கான் பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், புதுச்சேரி, சிதம்பரம், கும்பகோணம், திருச்சி ஆகிய ஊா்களுக்கும் தொடா்ந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT